Aulnay-sous-Bois : துப்பாக்கிச்சூடு!!
28 ஆனி 2025 சனி 23:07 | பார்வைகள் : 3996
Aulnay-sous-Bois நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
Cité de l'Europe பகுதியில் உள்ள Rue de Lisbonne வீதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவானதாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். விரைந்து சென்ற அவர்கள், சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் 28 வயதுடைய ஒருவர் விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.
அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே பகுதியில் கடந்த மார்ச் மாதத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan