செம்மணியில் தொடரும் அகழ்வு பணிகள்
28 ஆனி 2025 சனி 19:14 | பார்வைகள் : 2848
யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், இன்று மூன்றாவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்போது, இன்றைய தினம் மேலும் மூன்று மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக அகழ்வு பணிகளை முன்னெடுக்கும் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, முதலாம் கட்ட அகழ்வு பணிகளின்போது, 19 மனித என்பு கூட்டுத் தொகுதிகளில் மீட்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் கீழ், மூன்றாம் நாளான இன்றுவரை 8 மனித என்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதற்கமைய, இதுவரையில் செம்மணி - சிந்துபாத்தி மனித புதைக்குழியிலிருந்து மொத்தமாக 27 மனித என்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, குறித்த புதைகுழியை அகழ்வதற்கு 45 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, பின்னர் சிறுகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறித்த வழக்குடன் தொடர்புடைய சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan