செப்பு கம்பிகள் தொன் கணக்கில் மாயம் - 17 பேர் கைது!!

28 ஆனி 2025 சனி 15:34 | பார்வைகள் : 1465
பல தொன் எடையுள்ள செப்பு கம்பிகளை திருடிய 17 பேர் இல் து பிரான்சுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் செப்பு கம்பிகள் தொடர்ச்சியாக திருடப்படுவதாக பல ஆண்டுகளாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை 189 தொன் எடையுள்ள செப்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக Yvelines மற்றும் Val-d'Oise மாவட்டங்களில் அதிகளவில் திருடப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 877,000 யூரோக்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதை அடுத்து தீவிர விசாரணைகள் மற்றும் தேடுதலின் பின்னர் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுடைய சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவற்றும் 523,000 பெறுமதியுடைய ஆடம்பர வாகனம் ஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கை கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றதாகவும், 350 ஜொந்தாமினர் ஒரே நேரத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டு அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1