Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

RIS-ORANGIS அணையாத தீ - புதிய அறிவித்தல் - தொடர்ந்தும் போக்குவரத்து முடக்கம்!

 RIS-ORANGIS அணையாத தீ - புதிய அறிவித்தல் - தொடர்ந்தும் போக்குவரத்து முடக்கம்!

28 ஆனி 2025 சனி 14:42 | பார்வைகள் : 1946


எஸோன் (Essone) மாவட்டத்தில் உள்ள ரிஸ்-ஓராஞ்சிஸ் (RIS-ORANGIS) நகரில் ஒரு குப்பைத் சேகரிப்பு மையத்தில் கடந்த வியாழக்கிழமை (26 ஜூன்) ஒரு பாரிய தீ ஏற்பட்டது. தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றாலும், அது முழுமையாக அணையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

85 தீயணைப்பு வீரர்கள் பணியில் முழு வார இறுதிக்கும் கடமையில் ஈடுபடுகின்றனர். தீயின் தணல்கள் இன்னும் இருந்ததால், முழுமையாக அணைக்க தொடர்ந்து பணியாற்ற வேண்டி உள்ளது என தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

 


 

தீ காரணமாக பல முக்கிய சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன:

N104 இருபுறப் போக்குவரத்துக்கும் வெள்ளிக்கிழமை பிற்பகுதிவரை மூடப்பட்டது

இன்னும் மூடப்பட்டுள்ள சாலைகள்:

RN 446 (A6 ↔ Évry-Courcouronnes)

RN 440 (வட → தெற்கு, N104 நோக்கி)

RN 449 (உள் வழி ↔ N104)

 

தீயின் புகை மண்டலத்தில் இருந்தவர்கள் கீழ்காணும் முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும்:

வீட்டை நன்றாக காற்றோட்டம் செய்யவும் – புதிய காற்று உள்ளே புகும் வரை.
சிவப்பு அல்லது கருமை பூசலுடன் காணப்படும் காய்கறிகளை சாப்பிட வேண்டாம்
மாற்று காய்கறிகளை நன்றாக கழுவி, தேய்த்து சாப்பிட வேண்டும்

புகை மற்றும் சூடு காரணமாக, சுகாதார பாதிப்புகள் ஏற்படக்கூடும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாச பிரச்சனை உள்ளவர்கள், சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிகபட்ச பாதுகாப்புடன் செயல்படுங்கள் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் என மாவட்ட ஆணையம் எச்சரித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்