Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

நாளை முதல் குழந்தைகள் கூடும் இடங்களில் புகை பிடிக்கத் தடை!

நாளை முதல் குழந்தைகள் கூடும் இடங்களில் புகை பிடிக்கத் தடை!

28 ஆனி 2025 சனி 10:11 | பார்வைகள் : 2048


ஜூலை 1 முதல், பாடசாலைகள் அருகில், கடற்கரையில், பேருந்து நிறுததங்கங் என பல இடங்களில் புகைப்பிடிக்க தடை செய்யும் அரசாணை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த உத்தரவு சனிக்கிழமை (ஜூன் 28) அரசு செய்தித்தாளில் வெளியானது, ஞாயிறு (ஜூன் 29) முதல் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

எந்த இடங்களில் தடை

பேருந்து நிறுத்தங்கள் (Abribus)
பொது பூங்காக்கள்
கடற்கரைகள்
விளையாட்டு உள்ளக மற்றும் வெளியக மைதானங்கள்
பாடசாலைகள்;, நூலகங்கள், நீச்சல் குளங்கள், சிறுவர் தங்குமிடங்கள்


உணவகத்தின் அல்லது அருந்தகத்தின் வெளி அமர் இடங்களான terrasses இல் இந்த தடை பொருந்தாது.
இலத்திரனியல் சிகரெட்டுகள் (e-cigarettes) பற்றிய விவரங்கள் இந்த அரசாணையில் இல்லை.

நோக்கம்

குழந்தைகளை இரண்டாம் நிலை புகை சுவாசிப்பிலிருந்து பாதுகாப்பது
2032க்குள் புதை;தலற்ற தலைமுறையை உருவாக்குவது
15 மில்லியன் புகைத்தல் பழக்கமுள்ள பிரெஞ்சு மக்கைள மாற்றும் முயற்சி

அபராதம் என்ன?

தற்போது தண்டனை இல்லை, ஆனால் விரைவில் €135 அபராதம் விதிக்கப்படலாம். ஆரம்பத்தில் இது விளக்கம் வழங்கும் காலம் என்பதால் அறிவுறுத்தலுடன் அபராதம் விதிக்கப்படாது. சிறிது காலத்தில் மிகத் தீவிரமாக அபராதம் விதிக்கப்படும்.


1,600 நகராட்சிகள் முன்பே தங்களின் பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற இடங்களைப் புகைத்தல் தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளன
7,000க்கும் மேற்பட்ட இடங்களில் சிகரெட் தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது
தடையை மீறி சிறுவர்களுக்கு புகைபொருள் விற்றால் – இப்போது €200 அபராதம்

இந்த புதிய சட்டங்கள், 2023-2027 புகைத்தலுக்கு எதிரான தேசிய திட்டத்தின் (PNLT) ஒரு பகுதியாகும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்