கனடா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தி ட்ரம்ப் அதிரடி
28 ஆனி 2025 சனி 09:53 | பார்வைகள் : 5237
டிஜிட்டல் வரி சர்ச்சை காரணமாக அமெரிக்கா-கனடா வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தினார் டொனால்டு ட்ரம்ப்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதித்ததால், கனடாவுடன் நடைபெற்று வந்த வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
இது, வட அமெரிக்க வர்த்தக போர் மீண்டும் தீவிரமாகும் சூழலை உருவாக்கியுள்ளது.
"கனடா, ஒரு கடினமான வர்த்தக நாடு... டிஜிட்டல் சேவை வரி விதித்து அமெரிக்காவை நேரடியாக தாக்கியுள்ளது.
இப்போதுடன் எல்லா வர்த்தக பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வருகிறது," என்று அவர் தனது Truth சமூக தளத்தில் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப், அடுத்த 7 நாட்களில் கனேடிய பொருட்களுக்கு புதிய வரி விதிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு, கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்ற பின்னர் ஏற்பட்ட நல்லுறவை முற்றிலும் பாதித்துள்ளது.
கனேடிய நிதியமைச்சர் ஃபிலிப் சாம்பெய்ன், அண்மையில் "டிஜிட்டல் வரி திட்டம் தொடரும்" என அறிவித்திருந்தார். இதனையே காரணமாக ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த வரி, கனடாவில் பயன்படும் அமெரிக்க டெக் நிறுவன வருவாயின் 3 சதவீதத்தை வகிக்கும்.
மேலும், ட்ரம்ப் கனடாவின் பால் பொருட்கள் மீதான வரி குறித்து "400% வரி விதிக்கின்றனர்" என கண்டனம் தெரிவித்தார். இது அவரது முதல் பதவிக்காலத்திலிருந்து நிலவும் சர்ச்சை.
அமெரிக்க டொலருக்கு எதிராக கனேடிய டொலர் 0.7% வீழ்ந்துள்ளது. டிஜிட்டல் வரி குறித்து கனடா வணிக கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan