Paristamil Navigation Paristamil advert login

இந்த சனிக்கிழமை கடுமையான வெயில் மஞ்சள் எச்சரிக்கையில் 48 மாவட்டங்கள் - பரிஸ் -இல்-து-பிரான்ஸ் அடங்கலாக!

இந்த சனிக்கிழமை கடுமையான வெயில் மஞ்சள் எச்சரிக்கையில் 48 மாவட்டங்கள் - பரிஸ் -இல்-து-பிரான்ஸ் அடங்கலாக!

27 ஆனி 2025 வெள்ளி 21:50 | பார்வைகள் : 3516


ஜூன் 28, சனிக்கிழமை, 48 மாவட்டங்கள் வெப்ப அலைக்காக மஞ்சள் எச்சரிக்கைக்கு (vigilance jaune canicule) உட்படுத்தப்பட்டுள்ளன என Météo-France  எச்சரித்துள்ளது.

வெயில் எப்படி இருக்கப்போகிறது?

புயல் மழை மற்றும் சிறிதளவு வெயில் தணிந்திருந்ததன் பின்னராக, மீண்டும் கடுமையான வெயில் அதிகரிக்க தொடங்குகின்றது. மொன்பெலியே (Montpellier) பகுதியில் வெப்பநிலை 38°ஊ வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சள் எச்சரிக்கையில் உள்ள 48 மாவட்டங்கள்:

Paris, Yvelines, Seine-et-Marne, Loiret, Sarthe, Maine-et-Loire, Loire-Atlantique, Vendée, Indre-et-Loire, Deux-Sèvres, Yonne, Nièvre, Cher, Indre, Vienne, Charente-Maritime, Charente, Creuse, Haute-Vienne, Corrèze, Gironde, Dordogne, Lot, Lot-et-Garonne, Landes, Tarn-et-Garonne, Gers, Tarn, Haute-Garonne, Bas-Rhin, Haut-Rhin, Haute-Saône, Côte-d'Or, Saône-et-Loire, Doubs, Jura, Ain, Haute-Loire, Lozère, Haute-Savoie, Savoie, Hautes-Alpes, Corse-du-Sud, Ille-et-Vilaine, Orne, Mayenne, Eure-et-Loir.

மேலும் 14 14 மாவட்டங்கள் செம்மஞ்சன் எச்சரிக்கைக்குள் (canicule sévère)
கொண்டு வரப்பட்டுள்ளன. இது அதிக ஆபத்தான நிலையை குறிக்கிறது.

வெப்பத்தை எதிர்கொள்ள மெத்தியோ பிரோன்ஸ் பரிந்துரை செய்யும் நடவடிக்கைகள் :

முறையான நேரங்களில் தண்ணீர் குடிக்கவும்
வீட்டில் அல்லது நிழலில் இருக்க முயலவும்
ஜன்னல்களுக்கு திரை மூடிவைத்து வெப்பம் வராமல் தடுப்பது
உடலை சிறிது சிறிதாக ஈரமாக வைத்திருத்தல்
உடல் பணி அல்லது உடற்பயிற்சிகளைக் குறைத்துக்கொள்வது

போன்றவற்றைப் பரிந்துரை செய்துள்ளது.

இது ஒரு வெப்ப அலை வாரம். நலம் காக்கும் நடவடிக்கைகள் அவசியம்.
 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026