Xiaomi வெளியிட்ட YU7 எலெக்ட்ரிக் SUV- 1 மணி நேரத்தில் 2.89 லட்சம் ஆர்டர்கள்
27 ஆனி 2025 வெள்ளி 17:58 | பார்வைகள் : 3170
சீன சந்தையில் முன்னணியில் இருக்கும் Xiaomi நிறுவனம், தமது புதிய YU7 எலெக்ட்ரிக் SUV-ஐ ஜூன் 26-ஆம் திகதி பீஜிங்கில் வெளியிட்டது.
இந்த வாகனம் வெளியான 1 மணி நேரத்திற்குள் 2.89 லட்சம் ஆர்டர்களை பெற்றது, இது Tesla Model Y-க்கு நேரடி சவாலாக அமைந்துள்ளது.
YU7, Modena பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட midsize SUV ஆகும். 800-வோல்ட் கட்டமைப்பில் விரைவான சார்ஜிங் வசதி (620 கிமீக்கு 15 நிமிடங்களில்) கொண்டுள்ளது.
இதில் Standard, Pro, Max என மூன்று மொடல்கள் வருகிறது.
Standard மொடல்: 320Ps, 835 கிமீ வரை CLTC Range.
Pro மொடல்: 496Ps திறனுடன், 0-100 கிமீ வேகம் 4.27 விநாடிகளில் அடையும்
Max மொடல்: 690Ps திறனுடன், 0-100 கிமீ வேகம் 3.23 விநாடிகளில் அடையும்
இதில் Max மொடல் 101.7 kWh ternary battery (CATL), 760 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும்.
YU7-ல் உள்ளமைக்கப்பட்டுள்ள அம்சங்கள்
HyperVision display, Lidar, 4.6L fridge, 25 speakers, dual 80W charging ports, 1970 லிட்டர் ஸ்டோரேஜ் இதில் உள்ளன.
Xiaomi, YU7-ஐ Tesla Model Yயை விட பாரிய அளவில், அதிக சக்தியுடன், குறைந்த விலையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் ஆரம்ப விலை 35,300 டொலர் ஆகும்.
இந்த வெளியீடு, Tesla, BYD போன்ற பாரிய நிறுவனங்களுக்கு நேரடி சவாலாக மாறியுள்ளது. பீஜிங்கில் நடந்த வெளியீட்டு விழாவில் Xiaomi CEO Lei Jun, “Model Yயை எல்லா அம்சங்களிலும் YU7 மிஞ்சுகிறது” என கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan