பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் பலி!
27 ஆனி 2025 வெள்ளி 17:58 | பார்வைகள் : 1956
பாகிஸ்தான் ஸ்வாட் ஆற்று வெள்ளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்திருந்த இந்தக் குடும்பத்தினர் (18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அவர்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
மீட்புப் படையினர் தற்போது ஆற்றின் ஐந்து வெவ்வேறு பகுதிகளில் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு சடலங்கள் மீட்கப்பட்ட போதிலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 18 பேரில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அஞ்சப்படுகிறது.
ஸ்வாட் ஆறு, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வற்றாத ஆறுகளில் ஒன்றாகும்.
இது அதன் இயற்கை அழகுக்காக அறியப்பட்டாலும், கனமழை காலங்களில் ஆபத்தான திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு ஆளாகக்கூடியது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan