கடும் மழைவெள்ளத்தில் டைட்டானிக் இசையைப் போட்ட காவற்துறை வாகனம்! வைரலான காணொளி!

27 ஆனி 2025 வெள்ளி 16:45 | பார்வைகள் : 629
ஜூன் 25 மாலை, பாரிஸ் நகரம் கடுமையான இடியுடன் கூடிய மழையால் முடங்கியது. பல தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கியபோது, ஒரு காவற்துறை வாகனம் 'டைட்டானிக்' திரைப்படத்தின் பிரபலமான பாடல் 'My Heart Will Go On'-ஐ வாசிப்பதை பலர் காணொளியில் பதிவு செய்யதனர்.
இந்த பிரபலமான பாடலின் பின்னணியில், 1912-ல் மூழ்கிய டைட்டானிக் கப்பல் நினைவுபடுத்தப்பட்டது. பரிதாபமான சூழ்நிலையிலும் காவற்துறை வீரரின் இந்த நையாண்டி முயற்சி, சமூக வலைதளமான X ல் பெரிதும் வரவேற்கப்பட்டது.
https://www.youtube.com/shorts/3Yfk1ol3mb0
துன்பமான சூழ்நிலையிலும் இந்த முயற்சி பலரால் சமூகவலைத்தளங்களில் பாராட்டப்ட்டது
இதேவேளை, மழையால் RER , தெடருந்துப் பாதைகள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் பல இடங்களில் வெள்ள நீர் உள்ளே புகுந்து பாதிக்கப்பட்டன.