Paristamil Navigation Paristamil advert login

பரிசின் 5வது மாவட்ட மாநகராட்சி கட்டிடம் வரலாற்று சிறப்புமிக்க நினைவிடமாகப் பட்டியலிடப்படுமா?

பரிசின் 5வது மாவட்ட மாநகராட்சி கட்டிடம் வரலாற்று சிறப்புமிக்க நினைவிடமாகப் பட்டியலிடப்படுமா?

27 ஆனி 2025 வெள்ளி 15:38 | பார்வைகள் : 1209


பரிசின் 5வது மாவட்ட மாநகராட்சிக கட்டடம்  சில நாட்களுக்குள் வரலாற்று சிறப்புமிக்க நினைவிடப் பட்டியலில்  (CLASSÉE MONUMENT HISTORIQUE) இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, 1844-1865 இடையில் கட்டப்பட்டு, பாந்தியோனின் நேர் எதிர் இடத்தில் அமைந்துள்ள முக்கிய கட்டிடம்.

இந்த முயற்சிக்கு பல ஆண்டுகளாக போராடியதாக Horizons கட்சியின் 5வது மாவட்ட முதல்வர் புளோரோன்ஸ் பெர்தூ (Florence Berthout) தெரிவித்திருந்தார்.
இந்த பட்டியலிடல் மூலம், மாநகராட்சியின் எதிர்காலப் பராமரிப்பு பணிகளுக்காக மத்திய அரசிலிருந்து 40மூ வரை நிதி உதவி பெறும் வாய்ப்பு உருவாகும்.

இந்த தீர்மானம் ஜூலை 1 முதல் 4 வரை நடைபெறும் பாரிஸ் நகர சபை கூட்டத்தில், வாக்கெடுப்பிற்கு வரவிருக்கிறது. வாக்கெடுப்பில் தேவைப்படும் ஒப்புதல் கிடைத்தால், இது அதிகாரபூர்வமாக அமையலாம்.

முன்மாதிரி நகராட்சிகளுக்குப் பிறகு, இப்போது இந்த கட்டடமும் பாரிசின் வரலாற்று சின்னமாக உயர இருக்கிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்