மத்திய ஆபிரிக்க குடியரசில் மின்மாற்றிவெடித்ததால் பதற்றம் -30 பேர் உயிரிழப்பு
27 ஆனி 2025 வெள்ளி 12:58 | பார்வைகள் : 2015
மத்திய ஆபிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற தள்ளுமுள்ளில் பரீட்சையெழுத்திக்கொண்டிருந்த 30 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் காரணமாக மாணவர்கள் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பரீட்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை மின்பிறப்பாக்கி வெடித்தது சத்தமும் தொடர்ந்து வெளிவந்த புகைமண்டலமும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் பாங்குயில் உள்ள பாடசாலையொன்றில் 6000 மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர்பிழைத்த மாணவியொருவர் பிபிசியிடம் என்ன நடந்தது என தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது என்று கூட எனக்கு நினைவில் இல்லை. நாங்கள் தேர்வு அறையில் இருந்தோம் ஒரு சத்தம் கேட்டதும் நான் உடனடியாக மயக்கமடைந்தேன்" என்று அவர் கூறினார்.
"அப்போதிருந்து என் இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டு அது எனக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஜன்னலில் இருந்து குதித்த பிறகு இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த மற்றொரு மாணவரிடம் ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனல் உரையாடியுள்ளது.
வரலாறுபுவியியல் பரீட்சைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை வெடிப்பு இடம்பெற்றது,மாணவர்கள் தங்கள் உயிர்களை பாதுகாக்க முயன்றார்கள்,அவர்கள் தப்பியோடினர் பெருமளவானவர்கள் சிறிய கதவின் ஊடாக வெளியேற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது என அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக அரசியல் ஸ்திரமின்மை குழப்பங்களை எதிர்கொண்டுள்ள நாடு மத்திய ஆபிரிக்க குடியரசு.ரஷ்ய கூலிப்படையினரின் ஆதரவுடன் அரசாங்கப் படைகள் டௌடெராவின் நிர்வாகத்தை கவிழ்க்க அச்சுறுத்தும் ஆயுதக் குழுக்களிற்கு எதிராக போரிடுகின்றன
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan