Paristamil Navigation Paristamil advert login

PTA இரத்து செய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் கோரிக்கை

PTA இரத்து செய்யுமாறு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்  கோரிக்கை

27 ஆனி 2025 வெள்ளி 11:58 | பார்வைகள் : 693


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.

இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும். ஒரே பாலின திருமணத்தைக் குற்றமற்றதாக்க முன்மொழியும் தற்போதைய சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

நிகழ்நிலை பாதுகாப்பு குறித்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்க வேண்டும். பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை என தெரிவித்தார். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்