Ris-Orangis : பாரிய தீ.. வீதி போக்குவரத்து தடை!!

27 ஆனி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 2421
Ris-Orangis (Essonne) நகரில் நேற்று ஜூன் 26, வியாழக்கிழமை காலை பாரிய தீ பரவல் ஏற்பட்டது. வீதி போக்குவரத்து தடைப்பட்டது.
Hippodrome பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் இந்த தீ பரவல் ஏற்பட்டதாகவும், வானத்தில் பெரும் கரும்புகை எழுந்து அப்பகுதி முழுவதும் ஆக்கிரமித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதை அடுத்து Lisses தொடக்கம் Bondoufle நகரம் வரை, Bondoufle தொடக்கம் Ris-Orangis வரையான N104 சாலை முடக்கப்பட்டது.
ஏராளமான தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. RN 446 வீதியும், A6 நெடுஞ்சாலையும் தடைப்பட்டது.