எறும்புகளின் கடத்தல்: சுங்க கண்காணிப்பில் 81.6 கிலோ புகையிலை, 71 கள்ளப்பொருட்கள் பறிமுதல்!!
26 ஆனி 2025 வியாழன் 22:53 | பார்வைகள் : 2820
பிக்கார்டி (Picardie-Oise) பகுதியில் 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் சுமார் 8 டன் புகையிலை சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் நடந்த Colbert III என்ற பெயரிலான பெரிய அளவிலான கண்காணிப்பு நடவடிக்கையில், 99 சுங்க அதிகாரிகள், காவல் துறையினர், வருமானத் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படைகள் இணைந்து ஒய்ஸ் (l’Oise), லா சோம் (la Somme) மற்றும் ஐன்சு (l’Aisne) பகுதிகளில் 38 நேரடி கண்காணிப்புகள் மேற்கொண்டு, 27 கிலோ புகையிலை, 71 கள்ளப்பொருட்கள் மற்றும் சிறிய அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பரிஸ்-போவே விமான நிலைய பயணிகளிடமும் (l’aéroport Paris-Beauvais) 16.3 கிலோ புகையிலை கைப்பற்றப்பட்டுள்ளது. அதோடு, 5 கிலோ உண்ணதகாத இறைச்சியும் சிக்கியுள்ளது.
மொத்தமாக, இந்த நடவடிக்கையில் பிக்கார்டி முழுவதும் 81.6 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகர பகுதிகள், சாலைகள், கடைகள் மற்றும் அஞ்சல் வாயிலாக வந்தவை என பல்வேறு வழிகளில் புகையிலை மற்றும் கள்ளப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், உடைகள், முத்திரையில்லாத தேன் மற்றும் 6 கிலோ போதைப்பொருட்களும் உள்ளடக்கமாகும்.
இந்த "எறும்புகளின் கடத்தல்" என அழைக்கப்படும் வகையில், சிறிய அளவில் ஆனால் அதிக எண்ணிக்கையில் கடத்தப்படும் புகையிலையை தடுப்பது சுங்கத் துறையின் முக்கிய பணியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan