Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

குடியேற்றச் சட்டம் - வெளிநாட்டவர்களுக்கான திருமணத்தைத் தடை செய்யும் வாக்கெடுப்பு!

குடியேற்றச் சட்டம் -  வெளிநாட்டவர்களுக்கான திருமணத்தைத் தடை செய்யும் வாக்கெடுப்பு!

26 ஆனி 2025 வியாழன் 20:13 | பார்வைகள் : 4392


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை, UDR (Union des Droites pour la République)  கட்சியின் சட்டமன்ற  இடஒதுக்கீட்டு நாளில் ஒரு முக்கியமான சட்டப் பிரேரணை, நாட்டில் சட்டவிரோதமாக இருப்பவர்களுக்கு (தங்குமிட அனுமதி அலலது அகதித்தஞ்சம் நிராகரிக்கப்பட்டு நாட்டிற்குப் போகச் சொன்னவர்கள்) திருமணம் செய்வதைத் தடை செய்யும் தீர்மானமாகும். எரிக் சியோட்டியின் கட்சி மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த சட்ட முன்மொழிவை முன்வைத்துள்ளது.

சட்டவிரோத குடியிருப்பாளர்களுக்கான திருமணத் தடை

இந்த சட்டம், முதலில் செனட்டில் ஏற்கப்பட்டதோடு, அப்போது 227 ஆதரவுகளும், 110 எதிர்ப்புகளையும் பெற்றது. இதன் மூலம், இது பாராளுமன்றத்தில் இலகுவாக நிறைவேறக்கூடிய சட்டமாக வலுவாக கருதப்படுகிறது. இந்த வெற்றி எரிக் சியோட்டி தலைமையிலான வலதுசாரிகளுக்கு முக்கியமான முன்னேற்றமாக அமையக்கூடும்.

சட்டத் திட்டம், Stéphane Demilly (UDI)  என்ற செனட் உறுப்பினரால் முன்வைக்கப்பட்டது. தேசியக் கூட்டத்தில் இதை Éric Michoux, முன்வைத்து, 'முந்தைய செனட் ஒப்புதலுடன் ,இது விரைவாக நிறைவேறும் வாய்ப்பு உண்டு' என்று கூறினார்.

இந்த சட்டத் திட்டத்தின் முக்கிய நோக்கம்:

சட்டவிரோதமான குடியிருப்பில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு திருமணத்தைத் தடை செய்வதைத் தொடர்ந்து, ஒரு நகரபிதா அல்லது பன்மை அதிகாரம் பெற்ற உள்ளாட்சித் தலைவர் திருமணத்தை நிராகரிக்க முடியும்.

சட்டம் ஏற்கப்பட்டால், அதை செனட்டில் மீண்டும் ஆய்வு செய்யத் தேவையில்லை, எனவே நேரத்தைச் சேமிக்க முடியும்.

சனநாயகக் கட்சிகள், மையக் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. RN கட்சியின் 123 உறுப்பினர்கள் ஏற்கனவே ஆதரவு தர உள்ளனர். எதிர்ப்பாக, இடதுசாரி கட்சிகள் செனட்டில் எதிர்த்ததைப் போலவே, இங்கேயும் வாக்களிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த மசோதா, சட்டவிரோத குடியிருப்பில் உள்ள வெளிநாட்டவர்களுக்கான திருமணங்களைத் தடுக்கும் ஒரு முக்கியமான, வலதுசாரி ஆதரவு கொண்ட நடவடிக்கையாகும். அது ஏற்கப்பட்டால், குடியிருப்புச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், பிரான்சின் குடியுரிமை விவாதத்தில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்