கென்யாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - 20 பேர் பலி
27 ஆனி 2025 வெள்ளி 09:19 | பார்வைகள் : 1908
கென்யாவில் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் காரணமாக 20 பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை 400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்த உயிரிழப்புகள்ஏற்பட்டுள்ளன.
ஒருவருடத்திற்கு முன்னர் கென்யாவை உலுக்கிய வன்முறைகள் நிகழ்ந்த அதே நாளில் நேற்று கென்யா தலைநகர் உட்பட பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என கோசங்களை எழுப்பியதுடன் மரக்கிளைகளை அசைத்து தங்கள் போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் வாசல்ஸ்தலத்தை சென்றடைய முயன்றவேளை பொலிஸார் அவர்களை தடுத்துநிறுத்தினர்.
தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஆர்ப்பாட்டங்களில் இணைந்து கொண்டதாக ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
நாடாக நாங்கள் சரியான பாதையில் செல்வதாக தோன்றவில்லை குறிப்பாக கல்வி விடயத்தில் என தெரிவித்துள்ள அவர்நாடும் அரசியல் தலைமையும் எங்களை செவிமடுக்கவேண்டிய தருணம் இது என கருதுகின்றேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.
நைரோபியில் கட்டிடங்களிற்கு நடுவில் பெரும் கண்ணீர்புகை காணப்படுவதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்ணீர்புகையிலிருந்து விலகி ஓடுவதையும் கண்களை பொத்திக்கொள்வதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன, நகரில்ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டங்களை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் நேரடியாக ஒலிபரப்பு செய்வதற்கு அரசாங்கம் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan