Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் ஏவுகணைகளை தடுத்து நிறுத்திய பிரெஞ்சு வான் பாதுகாப்பு பொறிமுறை!!

ஈரானின் ஏவுகணைகளை தடுத்து நிறுத்திய பிரெஞ்சு வான் பாதுகாப்பு பொறிமுறை!!

26 ஆனி 2025 வியாழன் 13:48 | பார்வைகள் : 3428


ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை பிரெஞ்சு வான் பாதுகாப்பு பொறிமுறை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளதாக பிரெஞ்சு ஆயுதப்படைகளுக்கான அமைச்சர்  Sébastien Lecornu தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் நிறுவப்பட்டுள்ள இந்த வான் பாதுகாப்பு பொறிமுறை, ‘ஈரான் - இஸ்ரேலின் 12 நாட்கள் யுத்தத்தில் பல்வேறு ஏவுகணைகளை தடுத்து நிறுத்தியுள்ளது. ’ஏரானுக்கு எதிரான யுத்தத்தில் பிரெஞ்சு இராணுவம் பங்கேற்கவில்லை. ஆனா எங்களது இராணுவ முகாம்களை’ தடுக்கும் முயற்சியில் வான் பாதுகாப்பு பொறிமுறை சிறப்பாக செயற்பட்டது. பத்து வரையான ஏவுகணைகளை தடுத்து அழித்து இஸ்ரேலில் உள்ள எங்களது இராணுவத்தளங்களை பாதுகாத்துள்ளது!” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்ற அமர்வின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். 

12 நாட்கள் யுத்தத்தில் 400 வரையான பாலிஸ்டிக் ஏவுகணைகளையும், ஆயிரக்கணக்கான ட்ரோன்களையும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்