Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பொது விழாக்களில் 58% பிரஞ்சுமக்களிற்குத் தங்கள் பாதுகாப்பு குறித்த பயம்!

பொது விழாக்களில் 58% பிரஞ்சுமக்களிற்குத் தங்கள் பாதுகாப்பு குறித்த பயம்!

26 ஆனி 2025 வியாழன் 13:46 | பார்வைகள் : 5632


CNEWS, Europe 1 மற்றும் JDD ஆகியவற்றுக்காக CS நடத்திய மற்றும் ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய கருத்துக்கணிப்பின் படி பிரான்சில் பெரிய அளவிலான விழாக்கள், இசை விழா அல்லது விளையாட்டு வெற்றிக்கான கொண்டாட்டங்கள் போன்றவை நடைபெறும் போது, 58% மக்கள் தங்களது அல்லது தங்களது குடும்பத்தினர் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு குறித்த அச்சம் சமீபத்திய சில வன்முறைகளால் மேலும் வலுப்பெற்றுள்ளது. கடந்த ஜூன் 21ஆம் தேதி நடைபெற்ற இசை விழாவிலும், அதற்கு முந்தைய Pளுபு வெற்றிக்குப் பிறகான கொண்டாட்டங்களிலும் என பரிசில் பல்வேறு வன்முறைகள் நிகழ்ந்தன.

கருத்துக் கணிப்புத் தகவலின்படி பெண்களில் 61% பேர் பாதுகாப்புக்கான அச்சத்தை உணர்ந்துள்ளனர். இது ஆண்களுடன் (55ம%) ஒப்பிடுகையில் அதிகமாகும். குறிப்பாக பரிஸிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் வாழும் பெண்களிடம் இந்த கவலை அதிகம் (71%-72%) உள்ளது.

அரசியல் பார்வையில், Rassemblement National (74%) மற்றும் Les Républicains (65%) ஆதரவாளர்கள் மிகவும் பாதுகாப்புக்கான அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். La France Insoumise ஆதரவாளர்களும் (65%) இதே நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். அதேவேளை, Parti Socialiste (46%) மற்றும் Les Écologistes (42%) ஆதரவாளர்கள் குறைவாகவே அச்சம் தெரிவித்துள்ளனர். Renaissance ஆதரவாளர்களில் பாதி (50%) மட்டுமே பயத்தை உணர்ந்துள்ளனர்.

இந்த பயங்களை தூண்டும் முக்கிய காரணங்களில் ஒன்று சமீபத்திய விழாக்களில் நிகழ்ந்த பல்வேறு வன்முறைகள். கோடைகால ஆரம்ப இசை விழா நாளில் 300க்கும் மேற்பட்டர் iது செய்யப்பட்டனர். பெண்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவங்கள் பெருகி உள்ளன. மற்றும் பல்வேறு இடங்களில் காவற்துறையடூனரும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள். 
இந்த கருத்துக்கணிப்பு பெரிய விழாக்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பிரஞ்சு மக்கள் அதிகமாக பாதுகாப்புக்கான நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்பதையும், அதனைத் தடுப்பதற்கு அரசின் நடவடிக்கைகள் அவசியமானது என்பதனையும் வலியுறுத்துகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்