அணுசக்தி நிலையங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது- ஈரான் உறுதி
26 ஆனி 2025 வியாழன் 09:40 | பார்வைகள் : 4313
'ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற தாக்குதலை அமெரிக்கா, ஈரான் மீது நடத்தியது.
இந்நிலையில் ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழித்துள்ளோம் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளையில் தமது முக்கிய அணுசக்தி நிலையங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக ஈரான் முதல் தடவையாக ஒப்புக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
ஈரானில் உள்ள ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Nadans) மற்றும் இஸ்பஹான் (Isfahan) ஆகிய இடங்களில் அமைந்துள்ள 3 முக்கிய அணுசக்தி நிலையங்களைக் குறிவைத்து,அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல்களை நடத்தியது.
'ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்' (Operation Midnight Hammer) என்று அழைக்கப்பட்ட இந்த தாக்குதல்களில், அமெரிக்கா B-2 ஸ்பிரிட் குண்டுவீச்சு விமானங்கள், சக்திவாய்ந்த பதுங்கு குழி பஸ்டர் குண்டுகள் மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தின.
இந்தத் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
எனினும் ஈரான் அதனை மறுத்திருந்தது.
இந்நிலையில், முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களால் கடுமையான சேதத்தைச் சந்தித்ததாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஐநாவில் புகாரளிக்கப்படும் என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan