ஜுன் 28 முதல் பணம் எடுக்கும் தானியங்கிகளில் பாரிய மாற்றம்!

26 ஆனி 2025 வியாழன் 07:00 | பார்வைகள் : 1570
ஜுன் 28ம் திகதி முதல் பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய ஆணையத்தின் கீழுள்ள நாடுகள் புதிய வங்கிப் பணம் பெறும் இயந்திரங்களில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றது. பிரான்சில் இன்னமும் பலர் பணப்புழக்க வழக்கத்திலேயே உள்ளார்கள். இந்த மாற்றமானது முக்கியமாக மாற்றுத் திறனாளிகள் இந்த DAB (distributeur de billet) களைக் பயன்படுத்துவதற்கான வசதிகளுடன் நிறுவ வேண்டும் என்ற கட்டாயத்iதை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்துள்ளது.
இதற்கான விபரங்களை ஒவ்வொரு முக்கிய புள்ளிகளாக விளக்கம் அளிக்கின்றோம். சில சொற்கள் விளக்கம் கருதி ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.
என்ன மாறப்போகின்றது?
25 ஜூன் 28 முதல், புதிய ஐரோப்பிய கட்டுப்பாடுகள் படி, புதியவையாக நிறுவப்படும் அனைத்து DAB-களும் பின்வரும் வசதிகளை கொண்டிருக்க வேண்டும்:
HeadPhone பயன்படுத்தக்கூடிய Jack (instructions audio)
குரல் வழிகாட்டுதல்கள்
அழுத்தமான நிற வேறுபாடு (écran à contraste élevé)
பெரிய எழுத்துகள்
எளிய வழிமுறை (navigation simplifiée)
இதன் மூலம், மாற்றுத் திறனாளிகள் DAB சேவைகளை சீராகப் பயன்படுத்த முடியும்.
பழைய DAB-கள் (அணுகல் வசதியில்லாதவை) 2030 வரை பராமரிக்கப்படலாம்.
ஆனால், புதிய DAB களில் இந்த வசதிகள் கட்டாயம்.
பிரான்ஸ் வங்கி கூட்டமைப்புகள் ஏற்கனவே சிறப்பான முறையில் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
Crédit Agricole – புதிய DAB-களில் audio மற்றும் ஹெட்ஃபோன் jack இருக்கிறது.
BNP Paribas, Société Générale, Crédit Mutuel, CIC – இணைந்து Cash Services என்ற பொதுப் பெயரில் புதிய ATM-களை நிறுவவுள்ளனர்.
7,000 புதிய DAB-கள் 2026-க்கு முன்னர் நிறுவப்படும்
3,000 பழைய DAB-கள் நீக்கப்பட உள்ளன
DGCCRF (Direction générale de la concurrence, de la consommation et de la répression des fraudes) எனும் கண்காணிப்பு அதிகாரம்., விதிமுறை மீறல் ஏற்பட்டால், €1,500 வரையான அபராதம் விதிக்கும். தொடர்ந்து மீறினால், சேவை இடைநிறுத்தமும் ஏற்படும்
பிரெஞ்சுமக்கள் மற்றும் பணம் தொடர்பான உணர்வு
83% பேர் பணத்தை (cash) விரும்புகிறார்கள்
74% பேர் தினசரி பணம் பயன்படுத்துகிறார்கள்
87% பேர் பணம் ஒழிக்கப்படும் என்றால் கவலையாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்(
இந்த புதிய சட்டம், பண சேவைகள் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்ற ஐரோப்பிய நோக்கத்தின் ஒரு முக்கிய படியாகும். இது சமூக நீதியை முன்னேற்றுவதோடு, அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் முயற்சியாகும்.