Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

வார இறுதி - 40°C யை நெருங்கும் வெப்பம்

வார இறுதி - 40°C யை நெருங்கும் வெப்பம்

26 ஆனி 2025 வியாழன் 06:00 | பார்வைகள் : 3032


ஜூன் 28 மற்றும் 29 (சனிக்கிழமை, ஞாயிறு) நாட்களில் வெப்பநிலை 40°C யினை எட்ட உள்ளதாக பிரான்சின் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.

தென் பிரான்ஸ், குறிப்பாக  Perpignan - Carcassonne - Béziers பகுதிகளில் இந்த அதியுச்ச வெப்பம் பதிவாக உள்ளது.

இந்த வெப்ப அலை எதனால் வருகிறது?

Açores தீவுகளிலிருந்து பிரான்சிற்க்குள் வந்துள்ள உயரழுத்த காற்று மண்டலமான 'Anticyclone' காரணமாக, வெப்பம் மீண்டும் வலுப்பெறுகிறது. இந்த நிலை வெள்ளிக்கிழமை தொடங்கி அடுத்த வாரத்தின் தொடக்கம் வரை நீடிக்கக்கூடும் எனத எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்ப நிலை நிலவரம்

வெள்ளிக்கிழமை (ஜூன் 27)
வட பிரான்ஸ்: 27–33°C
தென் பிரான்ஸ்: 30–36°C
மத்தியதரைக் கடல் பகுதி: அதிகபட்சம் 38°C

சனிக்கிழமை (ஜூன் 28)

Manche கடற்கரை மற்றும் வட பகுதி: 30°C ஐ விட குறைவாக இருக்கும்
Provence, Languedoc, Roussillon : 32–37°C
சில இடங்களில் 39 °C வரை செல்லலாம்

ஞாயிறு (ஜூன் 29)

மேற்கு பிராந்தியம் முதல் புரொவாஞ்சு வரை: 36–40 °C
Perpignan (Pyrénées-Orientales) - Carcassonne (Aude) - Béziers (Hérault)  முக்கோண வலயத்திலும்  Provence  இலும் சுமார் 40°C

ஸ்பெயின் எல்லைக்கு அப்பால்: 42°C வரை உயரும் வாய்ப்பு

இரவு வெப்பம் (Nuit tropicale)

சனி இரவு முதல் ஞாயிறு காலை வரை சில பகுதிகளில் இரவிலும் வெப்பநிலை 20°C ஐ கடக்கும். இது தூக்கத்தையும் உடல்நலத்தையும் பாதிக்கக்கூடிய சூழ்நிலை.

ஜூன் மாதத்தில் இவ்வளவு வெப்பநிலை சாதாரணமல்ல. இது புதுமையானதல்ல என்றாலும் கவனிக்க வேண்டியது. இந்த வெப்ப அலை அடுத்த வார தொடக்கத்தில் வட பிரான்ஸிலும் பரவலாம்.


பொது அறிவுரை

– அதிக வெப்பம் ஏற்படக்கூடிய நேரங்களில் வெளியில் செல்ல தவிர்க்கவும்
– அதிகம் தண்ணீர் பருகவும்
– குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடலுழைப்பாளர்கள் சிறப்பு கவனத்தில் இருக்க வேண்டும்
– குளிரான இடங்களில் தங்கவும்

 

வர்த்தக‌ விளம்பரங்கள்