பரிஸ் மின்னல் மழை: பாராளுமன்றத்திற்குள் வெள்ளம், கூட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!
26 ஆனி 2025 வியாழன் 00:01 | பார்வைகள் : 2539
நேற்று இரவு, அதாவது சில மணி நேரங்களின் முன்னர் பாரிஸ் மற்றும் Île-de-France பகுதிகளை கடுமையாக தாக்கிய மின்னல் மழைகள், பிரான்ஸ் பாரளுமன்னறத்தினையும் விட்டு வைக்கவில்லை.
புதன்கிழமை மாலை நடைபெற்றிருந்த பொதுக்கூட்டம், மழையால் ஏற்பட்ட தாக்கங்களையும் உள்ளே ஒழுகிய நீரைச் சரிசெய்யவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மத்திய கிழக்கு நிலைமைகளைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, பிரதமர், தனது பேச்சிற்குப் பிறகு மேடை அருகே தோள்களில் தண்ணீர் சொட்டியதை உணர்ந்தார்.

கடுமையான மழையுடனும், பலத்த காற்றுகளுடனும் பிணைந்த இடி மின்னல் மழை நேரடியாக பாராளுமன்றத்திற்குள் புகுந்துவிட்டது. இதனால், உள்நாட்டு விவாதங்களை வழிநடத்திக் கொண்டிருந்த துணைத் தலைவர் ரொலாந்த் லெஸ்க்யூர், பொதுக்கூட்டத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பெருமழை பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, அதனை சுற்றியுள்ள சாலைகளிலும் வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan