Paristamil Navigation Paristamil advert login

மருந்துகள், மருத்துவமனைகள் மீது தாக்கம்: முக்கிய கட்டண மாற்றங்கள் எதிர்பார்ப்பு!!

மருந்துகள், மருத்துவமனைகள் மீது தாக்கம்: முக்கிய கட்டண மாற்றங்கள் எதிர்பார்ப்பு!!

25 ஆனி 2025 புதன் 22:00 | பார்வைகள் : 1354


2025ல் சுகாதார செலவுகளில் 1.7 பில்லியன் யூரோக்கள் சேமிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று வேலை மற்றும் சுகாதார அமைச்சர் கத்ரின் வோற்றின் இன்று (Catherine Vautrin) அறிவித்துள்ளார். 

அதிகமான அரசுச்செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, மருத்துவமனைகள் மற்றும் சமூக சுகாதார துறையில் 700 மில்லியன் யூரோக்கள் மற்றும் மருந்துகளுக்கு 500 மில்லியன் யூரோக்கள் வரை சேமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 

சுகாதார போக்குவரத்து கட்டண முறையில் மாற்றம் செய்யப்பட்டாலும், அது எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடைமுறையில் சாத்தியம் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். அரசு சுகாதார அமைப்பின் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்காக இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. 

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பற்றாக்குறை 2025ல் 16 பில்லியன் யூரோக்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது 2030ல் 41 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது. 

பிரதமர் பிரான்சுவா பய்ரூ தலைமையில், மொத்தமாக 40 பில்லியன் யூரோக்களை சேமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்