எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
26 ஆனி 2025 வியாழன் 12:08 | பார்வைகள் : 3008
என்னுடன் இருக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே எம்.எல்.ஏ., சீட்; பா.ம.க.,வில் எனக்கே அதிகாரம் உள்ளது என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: இங்கே வந்து இருக்கும் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தான் தேர்தலில் நிற்க போகிறவர்கள். இவர்களை தான் நான் தேர்ந்து எடுப்பேன். இவர்கள் தான் எதிர்கால சட்டசபை உறுப்பினர்கள். ஏனென்றால் எனக்கு எல்லா அதிகாரமும் உண்டு.
அதனால் தான் நான் இந்த கட்சியின் தலைவராக பொறுப்பு ஏற்று, நல்லவர்களை, வல்லவர்களை சட்டசபை உறுப்பினராக ஆக்குவேன் என்று இந்த நேரத்தில் உங்கள் மூலம் சொல்ல விரும்புகிறேன். என்னை சந்தித்து கட்சியில் பொறுப்பு வாங்கிய நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்.
தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சட்டசபை தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறும் கூட்டணி அமைக்கப்படும். முருக பக்தர்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா., அண்ணாதுரையை இழிவுபடுத்தியது தவறு. யாரையும் இழிவுபடுத்தக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan