Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பார்தெல்லாவிற்கு மரின் லூப்பனின் புதிய ஆணை!

பார்தெல்லாவிற்கு மரின் லூப்பனின் புதிய ஆணை!

25 ஆனி 2025 புதன் 17:28 | பார்வைகள் : 2223


மரீன் லூப்பன், 2027ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குத் தன்னைத் தடை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், ஜோர்தான் பார்தெல்லாவை அதற்குத் தயாராக இருக்குமாறு கூறியுள்ளார்.

'நான் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்பதை ஏற்கவேண்டியிருக்கிறது. ஜோர்தான் பார்தெல்லா அந்த சாத்தியத்தை ஏற்கத் தயாராக இருக்கிறார். அவருக்கு நான் நேரில் அந்த வாய்ப்புக்குத் தயாராகும் வழியில் சிந்திக்குமாறும், தயார் ஆகுமாறும் கேட்டிருக்கிறேன்,' என மரீன் லூப்பன் கூறினார்.

இது 2024-ம் ஆண்டு மார்சில், பாரீஸ் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 5 வருடங்கள் தகுதி நீக்கம் வழங்கியதையடுத்து தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மேல்முறையீடு வழக்கு, 2026ம் ஆண்டு கோடையில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'அதுவரை நான் போராடுவேன். இது ஒரு சிறந்த நிலை அல்ல என்பதை ஏற்கிறேன். ஆனால், வேறு என்ன செய்ய முடியும்? கொலை செய்யப்படுவதற்குமுன் தற்கொலை செய்ய வேண்டுமா?' என்று மரீன் லூப்பன், கேள்வி எழுப்பினார்.

முன்பு வரை, 2027-ல் பார்தெல்லா போட்டியிடுவதை மரீன் லூப்பன் ஒரு அசாத்தியமானது எனவே பார்த்திருந்தார். 'நான் ஒரு பாரஊர்தியின அடியில் விழுந்துவிட்டால், பார்தெல்லா எனக்கு பதிலாக வரவேண்டும் என்றே யாரும் கருதுவார்கள்,' என்று முன்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால், சமீப காலத்தில், ஜோர்தான் பார்தெல்லா மற்றும் மரீன் லூப்பன் இருவரும் ஒன்று சேர்ந்து பொதுக்கூட்டங்கள் நடத்தி, மக்கள் முன் ஒரு ஒற்றுமையைக் காட்டியுள்ளனர்.

நீதிமன்ற தடையாக இருந்தால் என்ன நடக்கும்?

2027 தேர்தலில் தன்னை நீதிமன்றம் தடுப்பது நடந்தால், அது தேர்தலின் நம்பகத்தன்மையை பாதித்துவிடும் எனவும் மரீன் லூப்பன் எச்சரித்துள்ளார்.

'பல தேர்தல் வாக்காளர்கள், தங்களைச் சேர்ந்தவர்களாக இல்லாவிட்டாலும் கூட, இது ஒரு சட்ட முறைகேடாகவே பார்க்கமுடியும்,' என்றும் கூறியுள்ளார்.

மரீன் லூப்பன், 2004–2016 க்கிடையிலான காலத்தில் ஐரோப்பா ஒன்றிய நிதிகளை முறையற்றவகையில் மோசடியாக உபNhகித்தமை  என்ற குற்றச்சாட்டில் முதலில் வந்த தீர்ப்பில்

4.4 மில்லியன் யூரோ மோசடிக்காக,
4 வருடங்கள் சிறை (இரண்டு வருடங்கள் நிரந்தரமாக),
5 வருட தகுதி நீக்கம் ஆகிய தண்டனைகளைப் பெற்றுள்ளார்.

இது 2027 ஜனாதிபதி தேர்தலின் சாத்திய நிலையை, பெரிதும் மாற்றக்கூடிய விடயமாக மாறியிருக்கிறது. இது எமானுவல் மக்ரோனின் கேவலமான அரசியல் வேலை எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்