Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

844 ரயில் நிலையங்களில் எல்லை சோதனைகள்: 691 புலம்பெயர்ந்தோர் கைது!!

844 ரயில் நிலையங்களில் எல்லை சோதனைகள்: 691 புலம்பெயர்ந்தோர் கைது!!

25 ஆனி 2025 புதன் 16:08 | பார்வைகள் : 3177


பிரான்சின் உள்துறை அமைச்சகம் கடந்த ஜூன் 18 மற்றும் 19 தேதிகளில் 844 ரயில் நிலையங்கள் மற்றும் 1,273 ரயில்களில், எல்லை சோதனைகளை நடத்தி, சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 691 பேரை கைது செய்ததாக அறிவித்துள்ளது. 

இதில் சுமார் 100 பேர் நாடுகடத்தப்பட்டு, 30 பேர் தற்காலிகக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் பிரான்சை விட்டு செல்லும் கட்டாய உத்தரவுகளுக்கு (Obligation de Quitter le Territoire Français-OQTF) உட்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளில் 4,679 பாதுகாப்புப் படையினர் பங்கேற்றுள்ளனர்.

இந்தச் சோதனைகள் புலம்பெயர்ந்தோர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டவை என்றும், இது "பிடிப்புத் தாக்குதல்" எனவும் தொழிற்சங்கங்கள் மற்றும் MRAP அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

பிரான்சின் வலதுசாரி அரசியல் தலைவர் புருனோ ரெடாயோ (Bruno Retailleau), எல்லை கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கி, "நாடு திரும்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறார். ஆனால் 2021ல் OQTF உத்தரவு பெற்றவர்களில் 9.3% மட்டுமே நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்