பிரான்ஸ் எல்லைப் பகுதியில் பெல்ஜியக் காவற்துறை வீரர் பலி!
25 ஆனி 2025 புதன் 16:28 | பார்வைகள் : 3956
செவ்வாய்க்கிழமை இரவு, போதைப் பொருள் கடத்தல் சந்தேகத்துடன் பெல்ஜிய காவற்துறையினரால் துரத்தப்பட்ட ஒரு வாகனத்தின் பின்தொடரலில், பிரான்சின் எல்லைப்பகுதியில் பெல்ஜிய காவற்துறை வீரர் மற்றும் துரத்தப்பட்ட குற்றவாளி ஒருவரும் சாவடைந்துள்ளனர்.
Angevillers (Moselle) பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், மாலை 10:45 மணியளவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 'GO-FAST' வாகனம் துரத்தப்பட, அதை நடுவீதியில் நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்த இருவரும் வெளியே ஓடியுள்ளனர்.
பெல்ஜிய காவற்துறையினர் அவர்களைப் பின் தொடர்ந்து னு14 பாதையில் ஓடியுள்ளனர். அப்போது எதிரே வந்த மற்றொரு வாகனம் இவர்களைக் மோதியதில், ஒரு குற்றவாளியும், ஒரு பெல்ஜிய காவற்துறை வீரரும்
கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வாகனம், பெல்ஜியத்திலிருந்து மூன்று காவற்துறை வாகனங்களால் துரத்தப்பட்ட நிலையில் பிரான்சிற்குள் வந்துள்ளது. சம்பவம் நடந்த இடமான யுபெநஎடைடநசள, பெல்ஜிய எல்லையிலிருந்து சுமார் 40 கிலேமீற்றர் தொலைவில் உள்ளது.
தியோன்வில்லின் விசாரணைப் பிரிவிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan