சர்வதேச அணு அமைப்பின் தiலைவரை உடன் சந்திக்கும் மக்ரோன்!!

25 ஆனி 2025 புதன் 15:28 | பார்வைகள் : 766
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன்,சர்வதேச அணுசக்தி நிறுவனமான AIEA (Agence internationale de l'énergie atomique) இன் தலைமை இயக்குநர் ரபேல் குரோஸ்ஸியை (Rafael Grossi) இந்த புதன்கிழமை மாலை எலிசே மாளிகையில் சந்திக்க உள்ளார்.
இந்தச் சந்திப்பு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஈரானின் முக்கிய அணு தளங்களைக் குறிவைத்த தாக்குதல்களுக்கு பிந்தைய பராமரிப்பு நடவடிக்கையாகும் என எலிசே மாளிகை அறிவித்துள்ளது.
'சமீபத்தில் ஈரானின் அணுஆயுத திட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், அந்த திட்டத்தின் தற்போதைய நிலை, கதிரியக்க ஆபத்துகள், AIEA அமைப்பின் பங்கு மற்றும் அணுஆயுத பரவலைத் தடுக்கும் நெறிமுறைகள் முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வழிமுறைகள் பற்றிய விவாதங்கள் நடைபெறவுள்ளன' என்று பிரான்ஸ் அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1