பிரித்தானியர்கள் போருக்குத் தயாராகவேண்டும் -எச்சரிக்கும் அரசு
25 ஆனி 2025 புதன் 13:14 | பார்வைகள் : 1518
பிரித்தானியர்கள் தங்கள் சொந்த மண்ணில் போருக்குத் தயாராகவேண்டும் என எச்சரிக்கிறது.
பிரித்தானிய அரசு, ’தேசிய பாதுகாப்பு உத்தி 2025 ஆபத்தான உலகில் பிரிட்டிஷ் மக்களுக்கான பாதுகாப்பு’ என்னும் ஆவணத்தை நேற்று வெளியிட்டது.
அந்த ஆவணம், பிரித்தானியர்கள் சொந்த மண்ணில் போருக்குத் தயாராகவேண்டும் என எச்சரிக்கிறது.
பல ஆண்டுகளுக்குப் பின், முதன்முறையாக பிரித்தானியா போர் அச்சுறுத்தல்களை நேரடியாக எதிகொள்ளும் நிலைமை உருவாகியுள்ளதால், பிரித்தானியர்கள் போருக்குத் தயாராகவேண்டும்.
பனிப்போர் காலகட்டத்தைவிட தற்போது, ஈரானின் அணு ஆயுத திட்டம் போன்ற விடயங்களால், பிரித்தானியாவுக்கும் அதன் கூட்டாளர் நாடுகளுக்கும் அணு ஆயுத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
பிரித்தானியா போருக்குள் இழுக்கப்படும் சூழல் அதிகரித்துவருகிறது.
மேலும், எதிரி நாடுகள் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளுடன் கைகோர்ப்பது, ரஷ்யாவும் சீனாவும், கடல் மற்றும் விண்வெளியை கட்டுப்படுத்த முயல்வது, எதிரி நாடுகள் பிரித்தானியாவுக்கு எதிராக ஒன்றிணைவது செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம் என பல்வேறு விடயங்கள், போர் உருவாகலாம் என்னும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள ஆவணம் தெரிவிக்கிறது.
ஆகவேதான், பிரித்தானியர்கள் போருக்குத் தயாராகவேண்டும் என அந்த ஆவணம் எச்சரிக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan