போதைப்பொருள் விவகாரத்தில் கிருஷ்ணா தலைமறைவா?
25 ஆனி 2025 புதன் 08:52 | பார்வைகள் : 1924
போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணை நடத்த நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுவதால், அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் சில திரையுலக பிரபலங்கள் மீது சந்தேக பார்வை திரும்பியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டதாக கூறப்படுவதால், அவரை விசாரிப்பதற்காக போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில் கேரளாவில் படப்பிடிப்பில் இருந்த கிருஷ்ணா, தற்போது தலைமறைவாகி விட்டதாகவும், அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சைபர் கிரைம் நிபுணர்கள் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சில நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுவது, கோலிவுட் திரையுலக வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.-
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan