வியாழக்கிழமைக்குள் 800 முதல் 900 பிரான்ஸ் நாட்டு மக்கள் இஸ்ரேலிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்: தெல்அவிவிலுள்ள பிரான்ஸ் தூதுவர் அறிவிப்பு!!
24 ஆனி 2025 செவ்வாய் 22:15 | பார்வைகள் : 9435
தெல்அவிவில் உள்ள பிரான்ஸ் தூதுவர் ப்ரெடெரிக் ஜூர்னெஸ், கடந்த சில நாட்களில் 4,000 முதல் 5,000 வரை பிரான்சு குடியரசு குடிமக்களிடமிருந்து அவர் அழைப்புகளை பெற்றுள்ளதாகவும், தனது முன்னுரிமையானது பிரஞ்சு மக்களை பாதுகாப்பாக மாற்றுவதுதான் எனவும் கூறியுள்ளார்.
மேலும் “வியாழக்கிழமைக்குள் 800 முதல் 900 வரை பிரான்ஸ் நாட்டு மக்கள் இஸ்ரேலிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்” என இன்று ப்ரெடெரிக் ஜூர்னெஸ் தெரிவித்துள்ளார். “இனி, நாளுக்கு இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டு குறைந்தது 200 பேர் ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்படுவார்கள்” என தூதுவர் அறிவித்துள்ளார்.
4,000 முதல் 5,000 வரை பிரஞ்சு குடிமக்கள் அண்மைய நாட்களில் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். “வாரியாக எண்ணிக்கையை கூற முடியவில்லை மற்றும் சிலர் தனிப்பட்ட முறையில் செல்வதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
"பிரான்ஸ் குழுக்கள் செய்த பணியை நான் பெருமையுடன் பார்க்கிறேன். இது ஒரு அற்புதமான குழுப்பணி. நமது மக்கள் மிகவும் பதற்றத்துடன் பல இரவுகள் தூங்காமல் இருந்தார்கள். ஆனால் அந்த விமானத்தை பார்த்தபோது, அவர்களுக்கு நம்பிக்கை வந்தது. ‘பிரான்ஸ் எங்களை கை விடவில்லை’ என்ற உணர்வு. நானும் பெருமையாக இருந்தேன்" என்று தெல்அவிவில் உள்ள பிரான்ஸ் தூதுவர் கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan