அவதானம் : ஒட்டுமொத்த பிரான்சையும் வாட்டி எடுக்கும் வெப்பம்!!
24 ஆனி 2025 செவ்வாய் 17:43 | பார்வைகள் : 4809
நாளை ஜூன் 25 - புதன்கிழமை நாடு முழுவதும் பலத்த வெப்பம் நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
நண்பகல் வரை அதிகூடிய வெப்பமும், அதன் பின்னர் இடி மின்னல் தாக்குதல்கள், மழை, வேகமான காற்று போன்ற சீரற்ற காலநிலை நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 35 தொடக்கம் 40℃ வரையான வெப்பம் நிலவும். நண்பகலின் பின்னர் இடி மின்னல் தாக்குதல்கள், 100 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sarthe, Mayenne, Orne, Calvados, Eure, Seine-Maritime, Lot, Cantal, Corrèze, Creuse, Puy-de-Dôme, Allier மற்றும் Loire ஆகிய 13 மாவட்டங்களுக்கு இடி மின்னல் தாக்குதல்கள் காரணமாக ‘செம்மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதற்கும் வெப்பம் காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan