சிம்புவின் ஐம்பதாவது படம் கைவிடப்படுகிறதா ?
24 ஆனி 2025 செவ்வாய் 18:06 | பார்வைகள் : 2357
துல்கர் சல்மான் நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. அதையடுத்து அவர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்குவதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர் சிம்பு நடிக்கும் ஐம்பதாவது படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். அந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்நிறுவனம் வெளியேறியதை அடுத்து சிம்புவே அந்த படத்தை தயாரித்து நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது. என்றாலும் தற்போது வரை அந்த படம் தொடங்கப்படவில்லை. அதோடு ஏற்கனவே மூன்று புதிய படங்களில் கமிட்டாகி இருந்த சிம்பு, தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நேரத்தில் சிம்புவுக்கு இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த தேசிங்கு பெரியசாமி அடுத்தபடியாக 'ஜெய் பீம், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' போன்ற படங்களில் நடித்த மணிகண்டனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan