Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிரோன்சுவா பய்ரூவிற்கு எதிராகத் தயராகும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்!

பிரோன்சுவா பய்ரூவிற்கு எதிராகத் தயராகும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம்!

24 ஆனி 2025 செவ்வாய் 17:00 | பார்வைகள் : 6405


ஓய்வூதியங்களுக்கான CONCLAVE என அழைக்கப்பட்ட அரசியல் கலந்துரையாடல் தோல்வியில் முடிந்ததையடுத்து, சுற்றுச்சூழலியல் (Écologistes) மற்றும் கொம்யூனிஸ்ட் கட்சிகள், பிரதமர் பிரோன்சுவா பய்ரூவிற்கு  எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இடதுசாரிகளின் ஒன்றிணைந்த முயற்சி

கொம்யூனிஸ்ட் குழு தலைவர் Stéphane Peu, பாராளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சுற்றுச்சூழலியல் குழுவுடன் இணைந்து, புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை உருவாக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இது "Nouveau Front populaire" என அழைக்கப்படும் இடதுசாரி கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கும் பரிந்துரைக்கப்படும் எனவும் கூறினார்.

'புதிய அரசாங்கம் தேவைப்படுகிறது. முடிவை பாராளுமன்றத்திற்கே விட்டால் தான் நியாயம் கிடைக்கும். அதற்கு முன்னதாகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.'

என Écologiste கட்சி பிரதிநிதி Benjamin Lucas-Lundy  தெரிவித்துள்ளார்.

பய்ரூவின் தலைமையில் நடந்த இந்த கலந்துரையாடல் முன்கூட்டியே ஒரு அரசியல் ஒப்பந்தமாக அமைந்துள்ளது. சோசலிஸ்டுகள் (PS)-க்கு வாய்ப்பு அளிக்க, அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்ப்பது நிபந்தனையாக இருந்தது. ஆனால் இப்போது அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில்,
'பாராளுமன்றத்தின் இறுதியான முடிவை பிரதமர் ஏற்காவிட்டால், நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குச் செல்வோம்.'

என PS தலைவர் Olivier Faure தெரிவித்துள்ளார்.

La France Insoumise (LFI) கட்சி, இந்த சூழ்நிலையை மிகக் கடுமையாக எடுத்துக்கொண்டு, உடனடி தீர்மானத்துக்கே அழைப்பு விடுத்துள்ளது.

'இடதுசாரி கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றிணைந்து பய்ரூவை நிராகரிக்க வேண்டும்.' என  LFI யின் தலைவி Mathilde Panot  தெரிவித்தும் உள்ளார்.

இது மக்ரோனின் ஓய்வூதியத் திட்டம்  தொடர்பான அரசியல் குழப்பத்தைத் தீவிரமாக்குகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்