Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

விலங்குகளை கைவிடுபவர்களிற்கு எதிராக SPA வின் விழிப்புணர்வு பிரச்சாரம்!

விலங்குகளை கைவிடுபவர்களிற்கு எதிராக SPA வின் விழிப்புணர்வு பிரச்சாரம்!

24 ஆனி 2025 செவ்வாய் 15:59 | பார்வைகள் : 5635


விடுமுறைக் காலங்களில் அதிகரிக்கும் விலங்கு கைவிடல்களுக்கு எதிராக, SPA (Société Protectrice des Animaux) அமைப்பு இன்று தனது புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை சமூக ஊடகங்களில் தொடங்கியுள்ளது. இந்த முயற்சியில் பிரபல நடிகர் GILLES LELLOUCHE தனது குரலை வழங்கியுள்ளார்.

பிரச்சார காணொளி ஒரு கவிதையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு விலங்கு அதன் உரிமையாளரிடம் உருக்கமான வார்த்தைகளில் தனது உணர்வுகளை பகிர்கின்றது. ஒரு நிமிடத்திற்கு நீளமான இந்த வீடியோ, உரிமையாளர்-விலங்கு உறவின் உண்மையான தோற்றத்தை உருக்கமாகக் காட்டுகிறது.

அதன் இறுதியில், முக்கியமான வரிகள்:

'நீ என் கதாநாயகன் ... கதாநாயகர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள்...'
என உருக்கமாக அமைகின்றது.

இந்த  காணொளி ஜூலை 1 முதல் திரையரங்கு மற்றும், TF1, m6, France Télévisions போன்ற முக்கியத் தொலைக்காட்சிகளில், மற்றும் இணைய தளங்களில் வெளியிடப்படும்.


8,000 விலங்குகள் கைவிடப்பட்டுள்ளன!

SPA அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2024 ஜூலை–ஆகஸ்ட் மாதங்களில் மட்டும், 8,000 கைவிடப்பட்ட விலங்குகள் பாதுகாப்பு நிலையங்களில் சேர்க்கப்பட்டன. இதே நேரத்தில், விலங்குகளை தத்தெடுக்கும் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


"கைவிட்டவர்களை குற்றம் கூறுவதற்கு பதிலாக, நம்பிக்கையுடன் நடந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறுவதே எமது நோக்கம். இந்த முயற்சி உறுதியையும், உண்மையையும், மனிதன் மற்றும் விலங்கிற்கிடையிலான ஆழமான உறவை நினைவுபடுத்தும்"

என SPA தலைவர் Jacques-Charles Fombonne  தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்