Paristamil Navigation Paristamil advert login

ஏன் உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்கள் இன்று பரிஸ் மேலாக பறக்கவிருக்கின்றன?

ஏன் உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்கள் இன்று பரிஸ் மேலாக பறக்கவிருக்கின்றன?

24 ஆனி 2025 செவ்வாய் 14:59 | பார்வைகள் : 10710


ஜூன் 24, செவ்வாய்க்கிழமை மதியம் முதல், பல உலங்குவானூர்திகளும் விமானங்களும் பரிஸ் நகரத்தின் மேலாக பலமுறை பறக்கவிருக்கின்றன. இது 
ஜூலை 14 தேசிய தினத்துக்கான பயிற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த விமானப் பயணங்கள், Issy-les-Moulineaux (Hauts-de-Seine) மற்றும் Bois de Vincennes  இடையே நடைபெறும்.

பிரான்சின் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் படைவிழா (défilé militaire)க்கான முன்பயிற்சிகளே இவை.

இது ஒரு பாதுகாப்பு பயிற்சியாகும். சத்தம், பாதுகாப்பு நடமாட்டம் ஆகியவை இயல்பானவையாக இருக்கும். பதற வேண்டியதில்லை.


மதியம் 1:30 மணி முதல் 5:30 மணி வரை

4 உலங்குவானூர்திகன் பறக்கவிருக்கின்றன:

Issy-les-Moulineaux aerodrome

La Défense

Champs-Élysées

Place de la Concorde

Porte Dorée

Bois de Vincennes

ஆகிய இடங்களிற்கு மேலாக இவை பறக்க உள்ளன.


அடுத்த பயிற்சியானது ஜூலை 9 நடைபெறும். அன்று:

70 விமானங்கள் பங்கேற்கும் பயிற்சி

மதியம் 2:30 முதல் 4:30 வரை - மழை பெய்தால் இந்தப் பயிற்சியாது  10 அல்லது 12 ஜூலைக்கு மாற்றம் செய்யப்படும்.

ஜூலை 14 தேசிய தினத்திற்குப் பறக்கும் விமானிகள் தயாராகின்றனர். 102 ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள், காலை 10 மணி முதல் பாரிஸ் நகரின் மேலாக பறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளன

 

2 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026