Paristamil Navigation Paristamil advert login

தெற்கு - தென்கிழக்கில் கடும் வெப்பம்! - 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

தெற்கு - தென்கிழக்கில் கடும் வெப்பம்! - 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

24 ஆனி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1506


 

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த கடும் வெப்பம், இந்த வாரம் முழுவதும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று ஜூன் 24, செவ்வாய்க்கிழமை 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்மஞ்சள்!

கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெப்பம் நிலவிவரும்  Isère and Rhône ஆகிய இரு மாவட்டங்களுக்கு இன்றும் அதே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக 37°C வரை வெப்பம் நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மஞ்சள்!

Ain, Ardèche, Aude, Bouches-du-Rhône, Drôme, Gard, Haute-Garonne, Hérault, Loire, Haute-Loire, Pyrénées-Orientales, Savoie, Haute-Savoie, Tarn மற்றும் Vaucluse ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கு குறைந்தபட்சம் 25 முதல் 30°C வரையான வெப்பம் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்