Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தன் சொந்த கட்சியை தொடக்குகிறார் முன்னாள் பிரதமர் டொமினிக் து வில்பன்!

தன் சொந்த கட்சியை தொடக்குகிறார் முன்னாள் பிரதமர் டொமினிக் து வில்பன்!

24 ஆனி 2025 செவ்வாய் 05:00 | பார்வைகள் : 4302


பிரான்சில் 'அதிகப்படியான சச்சரவுகளிலும், சீரற்ற நம்பிக்கைகளிலும் சிக்கியுள்ள அரசியல் சூழலிற்கு பதிலளிக்க, முன்னாள் பிரதமர் டொமினிக் து வில்பன் தன் சொந்த அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.

"France Humaniste"  எனப் பெயரிடப்பட்ட இந்தக் கட்சி, ஜூன் 23 ஆம் தேதி Le Parisien நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் அறிவிக்கப்பட்டது.

அறிமுகமும் எழுத்துமூலம் அரசியல் பிரவேசமும்

தன்னுடைய புத்தகம் «Le Pouvoir de dire non» » (இல்லை எனச் சொல்வதற்கான சக்தி) வெளியாகும் நேரத்தில், கட்சி தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது அனைவருக்கும் திறந்த இயக்கம். சமூக நீதி மற்றும் குடியரசு ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து பிரெஞ்சு மக்களையும் நாம் ஒன்றிணைக்க வேண்டும் என்று டொமினிக் து வில்பன் கூறினார்

தலைமை குழு

கட்சி தலைவர்: டொமினிக் து வில்பன்
அமைப்புச் செயலர்:  Benoît Jimenez.– Garges-lès-Gonesse நகர முதல்வர்

«அவர் மக்களுக்கு நெருக்கமான அரசியலை வலியுறுத்துகிறார். அதுவே எனது நோக்கும்» என வில்பன் விளக்கினார்.

கட்சி நோக்கங்கள்

நீதித்துவ சமூகத்தை பாதுகாக்கும்
குடியரசுச் சீரழிவுகளுக்கு எதிராக செயல்படும்
எல்லா பிரெஞ்சு மக்களையும் ஒன்றிணைக்கும் இயக்கம் என்பதாகக் கட்சி விளங்குகிறது
இணைதளம் ஊடாக ஏற்கனவே பல உள்ளூர் கிளைகள் உருவாகியுள்ளன
உறுப்பினராக சேர கட்டணம் இல்லை (இலவசம்)

பிரதமரின் விமர்சனக் குரல்

«அரசியல்வாதிகள் இன்று வீணான பேச்சுகளின் சுழற்சியில் சிக்கியுள்ளனர். நானோ, சிந்தனைக் கொள்கைகளில் தொடங்கும் போராட்டத்தைத் தேர்வு செய்கிறேன்», என்கிறார் வில்பன்.

Les Républicains kw;Wk; Rassemblement National (RN):  'உலகத்தை கருப்பு-வெள்ளையாக பார்க்கின்றனர்.

La France Insoumise (LFI): எல்லாவற்றையும் சிவப்பாக (தீவிர இடதுசாரியாக) பார்க்கின்றனர்'

அவர் 2027 ஆம் ஆண்டு தேர்தலை நோக்குகிறாரா?

«நான் எதையும் தவிர்க்கவில்லை. மாறாக, நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தில் என் பங்கு பெரிதாக இருக்கவேண்டும்» என்று ஜூன் 18 ஆம் தேதி வழங்கிய செவ்வியில் இதனை வில்பன் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்