எயார் பிரான்ஸ் – வளைகுடா நாடுகளுக்கான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
24 ஆனி 2025 செவ்வாய் 01:17 | பார்வைகள் : 8284
மத்திய கிழக்கு பகுதியிலுள்ள மோதல்களை தொடர்ந்து, எயார் பிரான்ஸ், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கான விமான சேவையை ஞாயிறிலிருந்து புதன்கிழமை வரை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மேலும், தெல்-அவிவ் நோக்கிய விமான சேவைத் தடைக்கான காலத்தையும் நீட்டித்துள்ளது.
எந்த விமானங்கள் பாதிக்கப்படுகின்றன?
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாரிஸ் ஷார்ல்ஸ்-தி-கால் விமான நிலையத்திலிருந்து துபாய் மற்றும் ரியாத் நோக்கிய விமானங்கள் புதன்கிழமை வரை வரை இரத்து செய்யப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட சேவைகள்:
துபாய்க்கு ஒரு விமானம் (ஒன்று சென்று - ஒன்று திரும்பும்)
ரியாத்க்கு ஒரு விமானம்
(இவை தினமும் இரண்டு சுற்றுவட்ட விமானங்கள்)
இந்த முடிவு, மத்திய கிழக்கில் நிலவும் அதிகபட்ச அழுத்தங்கள் மற்றும் எதிர்பாராத நிலைமைகளுக்கிடையில், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan