Argenteuil : துப்பாக்கிச்சூட்டில் தாய் - மகன் பலி!! - ஒருவர் கைது!!
23 ஆனி 2025 திங்கள் 16:12 | பார்வைகள் : 4534
Argenteuil நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தாய் - மகன் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, Argenteuil (Val-d'Oise) நகரில் உள்ள வீடொன்றுக்கு விரைந்து சென்றனர். அங்கு வயது குறிப்பிடப்படாத பெண் ஒருவரும், அவரது மகனும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர்.
அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்தனர். இரவு 9 மணி அளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்தை வந்தடையும் முன்னரே அவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan