திருமண விழாவில் கொலையாளிகள் கைது!
23 ஆனி 2025 திங்கள் 17:08 | பார்வைகள் : 7980
வார இறுதியில் VAUCLUSE மாகாணத்தில் உள்ள Goult என்ற இடத்தில் நடந்த திருமண விழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு நபர்கள் ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 20 முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள். அவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சில மணிநேரங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், அவர்களின் துல்லியமான தொடர்பு என்னவென்று இன்னமும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
மேலும், மூன்றாவது தாக்குதலாளி இன்னமும் தலைமறைவாக உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் எப்படி நடந்தது?
ஞாயிறு காலை 4:30 மணியளவில், திருமண விழா முடிந்து புது மணமக்கள் வாகனத்தில் வெளியேறும் நேரத்தில், மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி;ப் பிரயோகம் செய்துள்ளனர்.
27 வயதான மணமகள் உடனடியாக உயிரிழந்தார். 25 வயதுடைய அவரது கணவர், மற்றும் அவர்களுடன் இருந்த 13 வயது சிறுவன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். மேலும், குடும்பத்தினர் ஒருவரும் லேசான காயமடைந்துள்ளார்.
இதை விட துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். அவர் தாக்குதலாளிகளில் ஒருவராக இருக்கலாம் என்றும், அவரின் அடையாளம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan