Paristamil Navigation Paristamil advert login

அணு நிலையங்களை மட்டுமே குறிவைக்கும் தாக்குதல்களை வரவேற்க வேண்டும் - மரின் லூப்பன்!

அணு நிலையங்களை மட்டுமே குறிவைக்கும் தாக்குதல்களை வரவேற்க வேண்டும் - மரின் லூப்பன்!

23 ஆனி 2025 திங்கள் 16:08 | பார்வைகள் : 2055


அமெரிக்காவின்  B-2 Spirit  விமானம் GBU-57A ரக நிலக்கீழ் சுரங்கத்தைத் தாக்கும் குண்டுகளை வீசி அணு ஆயுத உற்பத்தி மையங்களை அழித்துள்ளதாக அறிவிததுள்ளது.

 

இந்தத் தாக்குதல் தொடர்பாக பிரான்சின் தேசியப் பேரணி கட்சியயான RN (Rassemblement National) இன்  தலைவி மரின் லூபென், ஒரு ஊடகச் செவ்வியில் 'அணுமையங்களை மட்டும் குறிவைக்கும் தாக்குதல்களை நாம் வரவேற்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

'இது போதுமானதாக இருக்கட்டும் என்று நம்புவோம். பலமுறை இஸ்ரேலை அழிப்பதாக மிரட்டியுள்ள இந்த இஸ்லாமிய தேசம் அணு ஆயுதம் உடையதாக இருந்துவிட வேண்டாம் என்பதில் அனைத்து நாடுகளும் உறுதியாக இருப்பதுடன் அமெரிக்காவின் தாக்குதலால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் எனவும் நான் நினைக்கிறேன்'

எனவும் மரின் லூப்பன் தெரிவித்திருந்தார்.

இது, ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களுக்கான ஒரு முக்கியமான வலுவான அரசியல் ஆதரவு வெளிப்பாடாக கருதப்படுகிறது.

இப்படியான வெளிப்படையான கருத்தை எமானுவல் மக்ரோன் கூட இன்னமும் தெரிவிக்க இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்