Paristamil Navigation Paristamil advert login

இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

23 ஆனி 2025 திங்கள் 13:59 | பார்வைகள் : 5187


இலங்கை சென்ற இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா - நிட்டம்புவை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபர் வெளிநாட்டிலிருந்து நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்  மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்து  5000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 23 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்