Paristamil Navigation Paristamil advert login

பெட்ரோல் விலை உயர்வு: பிரான்சில் நுகர்வோருக்கு கூடுதல் சுமை!!

பெட்ரோல் விலை உயர்வு: பிரான்சில் நுகர்வோருக்கு கூடுதல் சுமை!!

22 ஆனி 2025 ஞாயிறு 18:13 | பார்வைகள் : 5343


ஈரானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்குப் பிறகு, பெட்ரோல் விலை ஏற்கனவே உயர்ந்த நிலையில்,  உலக சந்தையில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஹார்முஸ் கடல்சுரங்கம் (détroit d’Ormuz) மூடப்படும் என்ற அச்சத்தால், பரல் விலை 80 டாலரைத் தாண்டும் என்று நிபுணர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கடல்சுரங்கம் உலக எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பாதையாக உள்ளது.

ஈரான் என்பது OPEP (பெட்ரோல் ஏற்றுமதியாளர் நாடுகளின் அமைப்பு) உறுப்பினராக உள்ள ஒரு பெரிய பெட்ரோல் உற்பத்தியாளர் நாடாகும். இப்போது நிலவும் அரசியல் நிலைமை, நேரடியாக பரல் விலையை பாதிக்கிறது. ஹார்முஸ் தடுப்பது சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

விலை உயர்வால், பிரான்சில் எரிபொருள் விலை கூடும். பரல் விலை ஒரு டாலர் உயர்ந்தால், நுகர்வோர் ஒரு லிட்டருக்கு சுமார் ஒரு சதவிகிதம் அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். 

ஜூன் தொடக்கத்தில் விலை 65 டாலராக இருந்தது, இப்போது 77 டாலராக உள்ளது. இது 12 டாலர் உயர்வாகும். இருப்பினும், எண்ணெய் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை. வார இறுதிக்குள் 15 முதல் 20 சதவிகிதம் வரை கூடுதலாக நாம் செலுத்த நேரிடும்” என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனா மற்றும் சிங்கப்பூர் அருகே ஈரானின் கப்பல்களில் பெருமளவு எண்ணெய் கையிருப்பில் உள்ளது. சந்தை நிலையை விலை மூலமாக கட்டுப்படுத்த முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் 2022ம் ஆண்டில் உக்ரைனில் போர் தொடங்கிய வேளையில். பரல் விலை 100 டாலரைத் தாண்டியது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026