Paristamil Navigation Paristamil advert login

மின்சார உற்பத்தி குறைப்பு!!

 மின்சார உற்பத்தி குறைப்பு!!

22 ஆனி 2025 ஞாயிறு 17:09 | பார்வைகள் : 3764


 

நாட்டில் நிலவிவரும் அதிக வெப்பம் காரணமாக அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்தி குறைக்கப்பட உள்ளதாக EDF அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பிரான்சில் அதிக வெப்பம் நிலவி வருகிறது. அதிகபட்சமாக 39.5°C வரை வெப்பம் பதிவாகியுள்ளது. அதை அடுத்தே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயன்பாட்டுக்கு தேவையான மின்சாரம் கிடைப்பதில் சிரமங்கள் எதுவும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாளை திங்கட்கிழமை முதல் இந்த உற்பத்திகள் மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பிரெஞ்சு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

3 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026