Paristamil Navigation Paristamil advert login

ஸ்டைலான தோற்றத்துடன் புதிய Honda City Sport வேரியன்ட் அறிமுகம்

ஸ்டைலான தோற்றத்துடன் புதிய Honda City Sport வேரியன்ட் அறிமுகம்

22 ஆனி 2025 ஞாயிறு 17:07 | பார்வைகள் : 314


Honda-வின் புதிய City Sport வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா, அதன் பிரபல மிட்-சைஸ்  செடான் மாடலான City-யின் புதிய ஸ்போர்ட்டி வெர்ஷனான "City Sport"-ஐ ரூ.14.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த கார் லிமிடெட் எடிஷனாக வழங்கப்படுகிறது.

இது பெட்ரோல் CVT மொடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மொடலாகும். பார்வையாளர்களையும் ஸ்டைலான தோற்றத்தை விரும்புவர்களையும் கவரும் வகையில் வெளிப்புற மற்றும் உள்ளமைவுகளில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  
வெளிப்புற ஹைலைட்ஸ்:
– Glossy black Sporty Grille

– Black Trunk Lip Spoiler


– Glossy black Shark Fin Antenna

– Distinctive Sport Emblem

– Sporty Grey Multi-Spoke Alloy Wheels

– Black ORVMs for contrast styling
உள்ளமைப்பு மேம்பாடுகள்:

- சிவப்பு ஸ்டிட்சிங் கொண்ட பிளாக் லெதரட் சீட்கள்

- டாஷ்போர்டு மற்றும் டோர் டிரிம்களில் சிவப்பு ஹைலைட்ஸ்

- பிளாக் ரூஃப் லைனர், பில்லர் டிரிம்கள்

- 7 கலர் ambient lighting
இஞ்சின் மற்றும் பாதுகாப்பு:
- 121PS பவர், 145Nm டார்க் கொண்ட 1.5L i-VTEC பெட்ரோல் எஞ்சின் (CVT, E20 கம்பாடிபிள்) பயன்படுத்தப்பட்டுள்ளது. மைலேஜ் 18.4 கி.மீ./லிட்டர்.

- Honda Sensing ADAS தொழில்நுட்பம் (லேன் அசிஸ்ட், குரூஸ் கண்ட்ரோல், பிரேக்கிங் அசிஸ்ட் உள்ளிட்டவை) வழங்கப்பட்டுள்ளது.
நிறங்கள்:

- Radiant Red Metallic

- Meteoroid Gray Metallic

- Platinum White Pearl (கூடுதல் கட்டணத்துடன்)

ஹோண்டா சிட்டி ஸ்போர்ட், அதே நம்பகத்தன்மையுடன் புதிய ஸ்போர்ட்டி அனுபவத்தை வழங்கும் வகையில் இளம் தலைமுறையை கவரும் நம்பிக்கையில் வந்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்