இசை விழாவில் பெண்கள் மீது ஊசி தாக்குதல்: 102 பேர் கைது! பலர் மருத்துவமனையில்!

22 ஆனி 2025 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 4505
பரிசில் இசை விழாவின் (Fête de la musique) போது, மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களில் பரபரப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. 11 பெண்கள் ஊசி குத்தப்பட்டதாகவும், ஆறு பேர் கத்தி அல்லது கத்தரிக்கோலால் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Châtelet, République, Saint-Martin உள்ளிட்ட பல பகுதிகளில் பெண்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளானதாக காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர். Paris புறநகரங்களான Asnières மற்றும் Brunoy இல் கூட மேலும் 13 பெண்கள் ஊசி தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
Burger King உணவகத்தில் ஒருவர் தனது காதலியை பாலியல் தொல்லையில் இருந்து காக்க முயன்றபோது கத்தரிக்கோலால் காயமடைந்துள்ளார். மேலும், Réaumur மற்றும் Léon-Giraud சாலைகளில் ஏற்பட்ட கத்திக்குத்து சம்பவங்களில் மூவர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
காவல்துறையினர் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன; Châtelet பகுதியில் Nike கடையை உடைக்க முயற்சி செய்யப்பட்டது. காவல் துறை தகவலின் படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை 7 மணி வரை 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் 93 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025