ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் எங்களுக்கு பங்கு இல்லை: பிரான்ஸ் அறிவிப்பு!!

22 ஆனி 2025 ஞாயிறு 13:46 | பார்வைகள் : 2877
ஈரானில் அமெரிக்கா அணுஇடங்களை குறிவைத்து நடத்திய தாக்குதல்களில், பிரான்ஸ் பங்கேற்கவில்லை என்றும், அதன் திட்டமிடலிலும் ஈடுபடவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் ஜோன்-நோயல் பரோ (Jean-Noël Barrot) தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு பிறகு அனைத்து தரப்புகளும் பதற்றம் அதிகரிக்காமல் இருப்பது முக்கியம் எனவும், நிலையான தீர்வுக்கு பேச்சுவார்த்தை மூலமான ஒரு அமைதி நடவடிக்கை தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், மத்திய கிழக்கு நிலைமையைப் பற்றி சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் ஓமான் சுல்தானுடன் இன்று காலை பேசியுள்ளார். மேலும், ஈரானில் ஏற்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் நிலையை மதிப்பீடு செய்ய, இன்று மாலை பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025