பாரிசின் முன்னாள் பேராயர் மரணம்! - ஜனாதிபதி மக்ரோன் இரங்கல்!!

19 ஆடி 2025 சனி 15:02 | பார்வைகள் : 1341
பரிசில் முன்னாள் பேராயர் கார்டினல் André Vingt-Trois தனது 82 ஆவது வயதில் நேற்று ஜூலை 18, வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி மக்ரோன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
2005 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு பரிசின் பேராயராக இருந்தார் André Vingt-Trois. அவரை ‘அமைதியை ஏற்படுத்தும் மனிதர்’ என குறிப்பிட்டு, தனது இரங்கலை மக்ரோன் பதிவு செய்துள்ளார்.
”தன் வாழ்க்கையை மற்றவர்களுக்காக அர்ப்பணித்தார். நம்பிக்கை, மற்றும் தொண்டு கொண்ட ஒரு மனிதராக, மிகவும் வறியவர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் சார்பாகப் பணியாற்றிய அவர், மதங்களுக்கு இடையேயான உரையாடலின் இறைதூதராகவும் இருந்தார்." என தனது இரங்கல் குறிப்பில் மக்ரோன் குறிப்பிட்டார்.
André Vingt-Trois நவம்பர் 7, 1942 ஆம் ஆண்டில் பிறந்த அவர் ஒரு பேராயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. மாறாக 1969 ஆம் ஆண்டு அவர் ஒரு பாதிரியாராக நியமிக்கப்பட்டு, பின்னர் 2005 ஆம் ஆண்டில் அவர் பரிசின் பேராயராக நியமிக்கப்பட்டார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1